நேற்று 1,891 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையை அச்சுறுத்தும் புத்தாண்டு COVID-19 கொத்தணியினால், நேற்றும் மிக அதிக தொற்றாளர்கள் பதிவாகினர். கடந்த ஒரு வாரமாக நாளொன்றில் பதிவாகும் தொற்றாளர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் அந்த எண்ணிக்கை மாறி வரும் நிலையில், நேற்று பதிவான எண்ணிக்கையே மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

நேற்று, 1,891 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 111,753 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 1,843 பேர், புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 48 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் 13,815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 764 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,242 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 1,108 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்