29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
விளையாட்டு

“ஐபிஎல் வரலாற்றில் இதுதான் சிறந்த கேட்ச். வாவ் வாவ் வாவ் பிஷ்னோய்” என இளம் வீரரை புகழும் பீட்டர்சன்!

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி ஓபனர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இழப்பை ஈடுசெய்ய மூன்றாவது இடத்தில் சுனில் நரைனை களமிறக்கினார் கேப்டன் மோர்கன். நரைன், துவக்கத்திலேயே அதிரடி காட்ட முயன்றபோது, ரவி பிஷ்னாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேட்ச் தற்போது வைரலாகி வருகிறது.

பிஷ்னோய் அபாரம்:

மூன்று பந்துகளை எதிர்கொண்ட நரைன், பொறுமை இழந்து பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கியடித்தார். அப்போது டீப் ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருந்த பிஷ்னோய் 30 மீட்டர்கள் ஓடி வந்து பந்தை தாவிப்படித்தார். அவர் கேட்சை விட்டுவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அவர் சிறுத்தைபோல் வேகம் காட்டி, இறுதியில் பறவையைப் போல் பறந்து அபாரமான முறையில் கேட்ச் பிடித்தார்.

இந்த வீடியோவை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் இந்த கேட்சை வெகுவாக பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், ஐபிஎல் வரலாற்றில் இதுதான் சிறந்த கேட்ச் எனப் பதிவிட்டுள்ளார்.

பீட்டர்சன் ட்வீட்:

“ஐபிஎல் வரலாற்றில் இதுதான் சிறந்த கேட்ச். வாவ் வாவ் வாவ் பிஷ்னோய்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 123/9 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்கள் அடித்தார். கிறிஸ் ஜோர்டன் கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அசத்தினார்.

கொல்கத்தா அணி பௌலர்கள் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களையும், பாட் கம்மின்ஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய கொல்கத்தா அணி 16.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கேப்டன் இயான் மோர்கன் 47 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், ஆட்டநாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment