26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா உலகம்

பறவை கூட்டை மாஸ்க்காக அணிந்து சென்ற தெலுங்கானா தாத்தா!-வைரலாகும் புகைப்படம்..

மாஸ்க் வாங்க பணம் இல்லாத முதியவர் ஒருவர், அரசு அலுவலகத்திற்கு பென்சன் தொகை வாங்க சென்ற போது, பறவை கூட்டை மாஸ்க்காக அணிந்து சென்றிருக்கிறார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ, வைரலாகி இருக்கிறார் இந்த தெலுங்கானா தாத்தா.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அவசியம் என அரசு வலியுறுத்தி வருகிறது. மாஸ்க் அணிவது நம்மை தற்காத்து கொள்வதும், வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்தும். இந்நிலையில், முகத்தை மறைக்க, தெலுங்கானாவை சேர்ந்த முதியவர் பறவைக் கூடு ஒன்றைப் பயன்படுத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தெலுங்கானாவின் மக்புப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் பகுதியைச் சேர்ந்த மேகலா குர்மய்யா என்பவர் கால்நடைகளை மேய்த்து வருகிறார். அவர் தனக்கு சேர வேண்டிய பென்சன் தொகையை பெற அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது. மாஸ்க் அணியாவிட்டால் அரசு அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி கிடைக்காது என்ற தகவல் தாத்தாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

மாஸ்க் வாங்க போதிய பணம் இல்லை; ஆனாலும் பென்சன் தொகையை பெற அரசு அலுவலகத்திற்குள் போய் தான் ஆக வேண்டும். என்ன செய்வது என யோசித்த அவர், பறவைக் கூட்டை மாஸ்க்காக மாற்றி அணிந்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அவர் நெசவாளர் என்பதால், எளிதாக அதனை வடிவமைப்பு செய்து அணிந்து கொண்டார். வெள்ளை குர்தா, கைலியுடன் அணிந்து அவர் கொடுத்த போஸ், வைரலாகி உள்ளது., பறவை கூடு மாஸ்க்

மாஸ்க் வாங்க பணமில்லாமல் இருக்கும் குர்மய்யா போன்றோர்களுக்கு அரசு இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும் என்றும், இதனால் கொரோனா கட்டுப்படாது ஆனால், அவரது முயற்சிக்கு பாராட்டுகள் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “முகமூடி வைத்திருந்து அதை சரியாக அணியாதவர்கள் தயவுசெய்து இந்த வயதானவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள்” என கருத்து பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment