தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு: புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல்..!!

Date:

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வங்கிகளின் வேலை நேரம் இன்றுமுதல் குறைக்கப்படுகிறது.

கொரோனாவின் 2வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.அதன்பின், நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாற்றி அமைக்கப்படும். இதன்படி வங்கிகளின் மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கிக்கிளைகள், காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

வேலை நேரத்தின்போது, வாடிக்கையாளர்களுடன் வங்கி அதிகாரிகள் நேரடி தொடர்பு கொள்ளக்கூடாது. கர்ப்பிணிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியுடன் வீட்டில் இருந்து பணிபுரியலாம். ஆதார் பதிவு மையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் உள்ள வங்கிக்கிளைகளை கையாள போலீஸ் உதவியை நாடலாம். கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வங்கிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செயல்படலாம். ஏ.டி.எம். மற்றும் பணம் மறுசுழற்சி எந்திரங்கள் தடையில்லாமல் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

வங்கிகளின் வணிக பிரதிநிதிகள் சேவை அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக செயல்பட வேண்டும். தகுதி உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கொரோனா தடுப்பூசி போடுவதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.

கொரோனா தொடர்பான, முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி பின்பற்றுதல் உட்பட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
வங்கிக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவது தவிர்க்க அறிவுரை கூற வேண்டும். வங்கி சேவை தளத்தை பயன்படுத்த வங்கிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தா, உறுப்பினர்கள், வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்