சினிமா

“என் காதலரின் நடவடிக்கை சரியில்லை”: காதல் தோல்வி குறித்து பேசிய அஞ்சலி!

சமீபத்தில் அஞ்சலி, கல்கி நடித்த பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் Famous ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன.

பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அதே போன்று கதைகள் அமைந்ததால் அஞ்சலி தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் முதன் முதலில் 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன் பிறகு “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி அவரது காதல் தோல்வி பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதில், “நான் காதலில் இருந்தது உண்மைதான். நான் காதலித்தவரின் சில குணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவரின் நடவடிக்கைகள் சரியில்லை. அதனால் தான் அவரை பிரிந்து விட்டேன். எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியானால் அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம்தான். இப்போது அதில் இருந்து முழுவதுமாக மீண்டும் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி; ப்ரொமோ வீடியோ வைரல்!

divya divya

பிறந்தநாளில் ‘சூர்யா 40’ அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ் !

divya divya

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் யார் தெரியுமா வில்லன்! -விரைவில் படப்பிடிப்பு

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!