மகனின் பிறந்தநாளில் நண்பர்களுக்கு கஞ்சா பார்ட்டி: ஆசிரியை கைது!

Date:

தனது மகனின் பிறந்தநாளில் போதைப்பொருள் விருந்து வைத்த ஆசிரியையும்,  மாணவர்களும் வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, பாமன்கடை பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இந்த விருந்துபசாரம் நடந்தது.

சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையே, தனது மகனின் பிறந்தநாளை இப்படி போதையாக கொண்டாடியுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்திய போது, 10 கிராம ஐஸ், 2000 மில்லி கிராம் கேரள கஞ்சா என்பன மீட்கப்பட்டன.

41 வயதான ஆசிரியை, மற்றொரு பெண், 18 வயதிற்கும் 26 வயதிற்கும் உட்பட்ட 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்

சந்தேக நபர்கள் மவுண்ட் லவனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்