இந்தோனேஷியாவின் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் மூழ்கிய நிலையில் பாலி கடற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலிருந்து 53 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை, கடலில் அடியில் மூழ்கி கண்டறியப்பட்டது. மூன்று பாகங்களாக உடைந்த நிலையில் நீர்மூழ்கி பாகங்கள் கண்டறியப்பட்டதாக நேற்று சனிக்கிழமை இந்தோனேஷிய இராணுவம் அறிவித்தது.
சோனார் ஸ்கான் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் 850 மீட்டர் (2,790 அடி) ஆழத்தில் கண்டறியப்பட்டது.
கே.ஆர்.ஐ.நங்கலா -402 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் சில பொருட்களையும் மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
கடந்த புதன்கிழமை, டோர்பிடோ பயிற்சியை நடத்தத் தயாராகிய இந்தோனேசியா நீர்மூழ்கி கப்பல் தொடர்பை இழந்தது காணாமல் போயிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1