நாடாளுமன்ற செயற்பாட்டில் கடைசி 10 இடங்களிலுள்ளவர்கள்: சம்பந்தன், பிள்ளையான், திலீபன் தமிழ் உறுப்பினர்கள்!

Date:

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில், நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையமான Manthri.lk நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது

இலங்கை பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 நாடாளமன்ற உறுப்பினர்களும், இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு எம்.பிக்களும் “நாடாளுமன்றத்தில் செயல்படாத“ உறுப்பினர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஈ.பி.டிபியின் கு.திலீபன், பொதுஜன பெரமுனவின் கருணாதாச கொடித்துவக்கு, நிபுண ரணவக்க, மர்ஜன் ஃபலீல், ஜனக பண்டார தென்னக்கோன், டிரான் அலெஸ் ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.எஸ். தௌஃபீக் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோருமே நாடாளுமன்ற செயற்பாட்டில் கடைசி இடங்களை பிடித்துள்ளனர்.

நாடாளுமன்ற வரவு, உரையாற்றுவது, விவாதங்களில் கலந்து கொள்வதன் அடிப்படையில் உறுப்பினர்களின் செயற்பாட்டு தரம் தீர்மானிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்