நேற்று 969 தொற்றாளர்கள்: ஒரேநாளில் பதிவான 2வது அதிகபட்ச எண்ணிக்கை!

Date:

இலங்கை நேற்று 969 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் பதிவான இரண்டாவது அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

இதன்படி, இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 99,691 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 931 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.  வெளிநாட்டிலிருந்து வந்த 38 நபர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

நேற்று, வைரஸிலிருந்து குணமடைந்த 151 நபர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,036 ஆக உயர்ந்தது.

வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 496 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

தற்போது 5,021 நபர்கள் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து மொத்தம் 634 வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்