நாடாளுமன்ற அமர்வின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ரூ .100,000 செலவிடப்படுகிறது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொடர்பாக எழுந்த வாதங்களைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட சபாநாயகர், ஒத்திவைப்பு வேளை விவாத நாள் ஆரம்பித்து 47 நிமிடங்கள் கடந்துவிட்டதாகவும், ரஞ்சித் மத்தும பண்டார தலைப்பில் இருந்து விலகி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
” தேவையற்ற வாதத்தால் ரூ .4.7 மில்லியன் பொது நிதி வீணடிக்கப்பட்டது, ”என்று சபாநாயகர் கூறினார்.




