ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் அமைச்சர்களுடன் நடத்தவிருந்த சந்திப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ திடீரென இரத்து செய்துள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர்களை விசேட கலந்துரையாடலொன்றிற்கு ஜனாதிபதி அழைத்திருந்தார். துறைமுக நகர சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பல மூத்த அரசாங்க அமைச்சர்கள் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து, ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், அனைத்து அமைச்சர்களும் இன்று நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சியின் எந்தவொரு அரசியல் நகர்வையும் ாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த பின்னர், கூட்டம் நாளை (22) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1