அமைச்சர்களுடனான கலந்துரையாடலை இரத்து செய்த கோட்டா!

Date:

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் அமைச்சர்களுடன் நடத்தவிருந்த சந்திப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ திடீரென இரத்து செய்துள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர்களை விசேட கலந்துரையாடலொன்றிற்கு ஜனாதிபதி அழைத்திருந்தார். துறைமுக நகர சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பல மூத்த அரசாங்க அமைச்சர்கள் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து, ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், அனைத்து அமைச்சர்களும் இன்று நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும்,  எதிர்க்கட்சியின் எந்தவொரு அரசியல் நகர்வையும் ாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த பின்னர், கூட்டம் நாளை (22) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்