நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையையடுத்து, சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் சபை கூடிய போது, சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நிகழ்ந்தது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான, விவாதம் இன்று (21) நடைபெறவிருந்தது.
இந்த அறிக்கை விவாதத்தை நாளை நடத்த அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். எனினும், சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன அதை ஆட்சேபித்தார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசுக்கு, மு.கா தலைவர் ஹக்கீம் அழைப்பு விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக வார்த்தை மோதல் ஏற்பட்டு, கொ்தளிப்பான நிலைமையேற்பட்டு, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் சபை கூடி விவாதங்கள் நடந்து வருகிறது.




