மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 Kg கஞ்சா மீட்பு!

Date:

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 185 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார், 54ஆம் பிரிவு இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

70 பைகளில் காணப்பட்ட 185 கிலோகிராம் கஞ்சாவை பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத்தினர், மேலதிக விசார​ணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கிளிநொச்சி பொலிஸ் வி​சேட படை முகாமிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு – ஒருவர் கைது

வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்