திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க பெண்!! வைரலாகும் புகைப்படம்..

Date:

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கொரோனா பரவல் காரணமாக தனது திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டதால், திருமண உடையில் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட, திருமணத்திற்கு அணியும் வெள்ளை கவுனில் வந்த இளம் பெண் ஒருவரின் புகைப்படம் டுவிட்டரில் ஒரு சுற்று வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பால்டிமோரை சேர்ந்த இளம்பெண் சாரா ஸ்டட்லி. இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது. தனது திருமண வரவேற்புக்காக, அவர் வெள்ளை நிறத்தில் புதிய ஆடை ஒன்றை வாங்கியிருந்தார்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக, அரசு விதித்திருந்த கட்டுப்பாட்டால், தனது திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தனியார் நிறுவனம் மூலம் எளிமையாக தனது திருமணத்தை முடித்து கொண்டார். ஆனால், திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் அதற்காக தான் எடுத்த உடையை அணிய முடியாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட சென்ற அவர், புதிய திருமண ஆடையை அணிந்து சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

சாராவுக்கு தடுப்பூசி எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, ​​அதை ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற எண்ணிய அவர், தற்போது வெள்ளை கவுன் அணிந்து அதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து கூறும் சாரா, ‘எனது திருமண வரவேற்பு என்று நடக்கும் என்று தெரியவில்லை. அதற்கான சாத்தியம் இப்போது இருப்பது போன்ற நிகழ்வுகளும் நடக்கவில்லை. எனவே எனது திருமண வரவேற்பு ஆடையை கொரோனா தடுப்பூசி போடும் போது அணிந்து கொண்டேன்’ என கூறினார்.

Views: – 36

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்