இரண்டாம் அலை கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வர மறுத்த பிரபல நடிகர் ஜெகபதி பாபு ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

Date:

கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரபல நடிகர் ஜெகபதி பாபு தெரிவித்திருக்கிறாராம்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருபவர் ஜெகபதி பாபு. விஜய்யின் பைரவா, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார் ஜெகபதி பாபு. அண்மையில் மறைந்த ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் லாபம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெகபதி பாபு.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் மகா சமுத்திரம் படத்தில் அவர் நடிக்கிறார். மகா சமுத்திரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் தற்போது ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

வில்லனாக நடிக்கும் ஜெகபதி பாபுவின் காட்சிகளை படமாக்க அவரை அழைத்துள்ளனர். அவரோ, கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அதனால் என்னால் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம்.

இரண்டாம் அலையில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நான் ரிஸ்க் எடுத்து விசாகப்பட்டினம் வரை வர மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஜெகபதி பாபு.

அவர் சொன்னதை கேட்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம். ஜெகபதி பாபு வர மறுப்பதால் இறுதி கட்ட படப்பிடிப்பில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்களாம். ஜெகபதி பாபு வர மறுத்ததில் ஆச்சரியம் இல்லை. படத்தை விட உயிர் தான் முக்கியம் என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜய் பூபதி இயக்கி வரும் மகா சமுத்திரம் படத்தில் ஷர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி, அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். காதல் கதையான மகா சமுத்திரம் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. படத்தை ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள போதிலும் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த வயதிலும் அவர் துணிச்சலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அண்மையில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி ஆரம்பம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு...

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்