மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை கிழக்கில் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிடடு இரு சமூகங்களும் இணைந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
புணானை ஜக்கிய மரண ஆதரவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் மரதன் ஓட்டம்,றபான் அடித்தல்,வினோத உடை,ஏனை ய கலாச்சார நிகழ்சிகள் மற்றும் இசை நிகழ்சிகளும் நடைபெற்றன.
அத்துடன் பாரம்பரிய உணவு வகைகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றிய வெற்றியாளர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் அதிதியாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன்,கிராமசேவை உத்தியோகஸ்;த்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.





