கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது அதை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளது கவலை அளிக்கிறது என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இதுவரை நாட்டில் 11 கோடிக்கும் அதிமான பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருத்துவ தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த மூத்தஅதிகாரி ஒருவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
எனவே, ரஷ்யாவில் இருந்து தடுப்பூசி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை எதிர்பார்த்த உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன” என்றார்.