அதிரடிப்படை சூடு… நிறுத்தாமல் தப்பியோடிய கன்டர் வாகனம்: முள்ளியில் நடந்தது என்ன?

Date:

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இன்று (16) அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் இதேபகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை வழிமறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோதித்தள்ளி விட்டு, கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, இன்று விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு, பாதையில் முள் தடைகள் இடப்பட்டு, கடத்தல்காரர்கள் வழிமறிக்கப்பட்டனர்.

மகேந்திரா கன்டர் வாகனத்தில் மணலுடன் வந்த கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வாகனத்தில் மேல் பகுதியில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

எனினும், கன்டர் நிறுத்தாமல் தப்பிச் சென்று விட்டது.

சற்று நேரத்தில் வயிறு, காலில் காயமடைந்த காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 30, 31 வயதுடையவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்