48 மணித்தியாலத்தில் 30 விபத்து மரணம்… 150 பேர் காயம்!

Date:

இன்று அதிகாலை 06 மணியுடன் முடிவடைந்த 48 மணி நேரத்தில் விபத்துக்களினால் 30 பேர் உயிரிழந்ததுடன், 150 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பலியானவர்களில் 8 பேர் நேற்று ஏற்பட்ட விபத்துக்களில் மரணித்தவர்கள் என்றும், மீதமுள்ள எட்டு பேர் முன்னர் நிகழ்ந்த விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

பலியானவர்களில் 12 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 2 பயணிகள், 2 பாதசாரிகள் மற்றும் ஒரு சாரதி ஆகியோர் அடங்குகின்றனர்.

கண்டகெட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் காயமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வீதி விபத்துக்களில் கணிசமான அதிகரிப்பு இருப்பதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்