தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

Date:

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 9471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் 15,500+ வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி முகம் கொண்டுள்ளது.

தவெக ஆட்சியமைந்த பின்னர் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் இன்றைய வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் தவெக முன்னிலை, பின்னர் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. ஒரு கட்டத்துக்குப் பின்னர் திமுக இரண்டாம் இடத்துக்கு முந்தியது. திருப்பங்கள் பல கடந்து தாராபுரத்தை வசப்படுத்தியுள்ளது தவெக.

23 சுற்றுகள் நிறைவில் தவெக வெற்றி

தவெக – சத்யபாமா: 66,841

திமுக – சுகன்யா: 57,370

அதிமுக – பானுமதி: 45,280

நாதக – கார்த்திகா – 5268

இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன் – 1157 வாக்குகள் பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் தவெக 46,438 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இப்போது 66,841 வாக்குகள் பெற்றுள்ளது.

தாராபுரத்தில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் 80.25% வாக்குகள் பதிவாகின. 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

25-வது சுற்று முடிவில் மதுராந்தகம் முன்னிலை நிலவரம்:

தவெக – மரகதம் குமரவேல்: 73,457

திமுக – பரந்தாமன்: 53,105

அதிமுக – கனிதா சம்பத்: 46,659

நாதக – ஜானகிராமன்: 2,694

சிபிஎம் – பி.சுகந்தி: 1,966

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்