ஐ.பி.எல் தொடரிலிருந்து ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர் விலகல்!!

Date:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. அந்த அணியிலிருந்து முக்கிய ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் T20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கெயிலுக்கு கேட்ச் பிடிக்கும் போது பென் ஸ்டோக்ஸின் இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் பெரிதாகி விரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஸ்டோக்ஸ் பீல்டிங் செய்தபோது காயம் அடைந்த காட்சி ஏற்கெனவே வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பந்துவீச்சில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்திய நிலையில், பேட்டிங்கில் ஸ்டோக்ஸ் விலகியது பேரிடியாக அமைந்துள்ளது. ஸ்டோக்ஸுக்கு பதிலாக எந்த வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை.

இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்தபோது அவரின் இடதுகை விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து 2020-21 ஐபிஎல் சீசனிலிருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். ஆனாலும், தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் நீடிப்பார், அணிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தில் ஸ்டோக்ஸ் மிகவும் மதிப்பு மிக்க வீரர்.அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்ட காயம் எலும்பு முறிவு என்பது தெரியவந்துள்ளது. ஆனால்,அவரின் காயத்தின் தன்மை என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியவரும்.

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெளிநாட்டு வீரர்கள் என்ற வகையில் லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர் இவர்கள் மூவருமே பந்துவீச்சாளர்கள், டேவிட் மில்லர் பேட்ஸமேன் வரிசையில் உள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்கிற்கு ஏற்பட்டகாயத்தால், அவரால், நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூன் மாதம் இங்கிலாந்து அணியில் பங்கேற்க முடியுமா என்றகேள்வி எழுந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியா இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது, அதை முடித்துக்கொண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்தத் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியுமா என்பது அவரின் காயத்தின் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமையும்.

spot_imgspot_img

More like this
Related

நீல நிறம் பூசி லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களாக மாற்றி மோசடி – மூவர் கைது!

சந்தையில் நிலவும் மஞ்சள் நிற லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு தட்டுப்பாடு மற்றும்...

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்