திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா!!

Date:

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல். அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பதவியேற்பு விதிகளை மீறியதுடன், அரசு பதவி நியமனங்களில் தனது வாரிசுகளுக்கு சலுகை அளித்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதனை விசாரித்த லோக் ஆயுக்தா அமைப்பு, இந்த புகாரில் அமைச்சர் குற்றவாளிதான் எனவும், அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கடந்த வாரம் தெரிவித்தது.

இதை எதிர்த்து ஜலீல் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், லோக் ஆயுக்தா முடிவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.டி.ஜலீல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவருடன் மது அருந்திய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்