மக்களை திசைதிருப்பவே மணிவண்ணன் கைது: சஜித்!

Date:

மக்களை திசைதிருப்பவே யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டார் என்பதை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (10)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஏதேனும் தமது கடமையின் போது தவறிழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய முறைகள் உள்ளன.

அதனைவிடுத்து அவரை பயங்கரவாதி போல் சித்தரித்து நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இன்னும் அறியப்படாதுள்ளனர்.

எனவே, புதிய அச்சங்களை ஏற்படுவதை தவிர்த்து ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்