நேற்று 221 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 221 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை  தொடர்ந்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,933 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்டவர்களில், 190 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக  அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 89,032 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 31 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதுமுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 2,485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 209 பேர் குணமடைந்த வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90,917 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 346 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்