யாழ்ப்பாணத்தில் வங்கி அட்டையை திருடி பொருட் கொள்வனவில் ஈடுபடும் ஆசாமியொருவர் பற்றிய தகவலை, ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது வங்கி அட்டை திருடப்பட்டதன் அடிப்படையில் அந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவு வருமாறு-
யாழ் பஸ்நிலையத்திற்கு முன்னால் பொலிஸ் சோதனை சாவடியில் எம்மை மறித்து சாரதி அனுமதிப்பத்திரம் பார்த்த போது இனொருவரையும் மறித்து பார்த்தார்கள். அப்போது அவர் தனது purse இனை கிழே தவறவிட பொருட்கள் சிதறியது.
நான் எனது நண்பி police மூவரும் கீழே இருந்த பொருட்களை எடுத்து கொடுத்த வேளையில் அவர் எனது purse இனை எடுத்து கொண்டு சென்றுவிட்டார்…
வைத்திய சாலைக்கு முன்னால் உள்ள மருந்தகமொன்றில் 4 sustagen கொள்வனவு செய்துள்ளார். சிட்டை போடும் நேரத்தில் card block பண்ணிவிட்டேன் purchase alert வந்ததுமே அந்த மருந்தகத்துக்கு சென்றேன்.
தனது card ல் cash இருக்கு ஏன் வேலை செய்யவில்லை என பேசிட்டு போகிறார்…
இதே நபர் நேற்றும் இதே போல மருந்தகத்துக்கு card கொண்டு வந்து வேலை செய்யவில்லையாம்.
தலைக்கவசம், முகக்கவசம் காரணமாக முகம் தெரியவில்லை. மோட்டார் சைக்கிளை
தூர விட்டு நடந்து வந்ததால் இலக்கமும் தெரியவில்லை.