குளியாப்பிட்டிய பகுதியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இந்திய பிரஜை, உயிரிழந்துள்ளார்.
வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை பெண்ணை திருமணம் செய்து பல காலமாக இலங்கையில் வாழ்ந்த அந்த நபர், மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் விகாரையில் படுத்துறங்குவதாகவும், மதுபோதையில் புத்தர் சிலைகளை சேதமாக்கியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




