ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியொருவர் குழந்தை பிரசவித்துள்ளார். அவரது கர்ப்பத்திற்கு காரணமானவரென கருதப்படும் 21 வயதான காதலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொட்டகலையை சேர்ந்த சந்தேகநபரான 21 வயது இளைஞன் கடந்த 3ஆம் திகதி ஹட்டன் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவரை விளக்கமளிறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தை பிரசவித்த மாணவி கடந்த மாதம் 26 ஆம் திகதியும் பாடசாலைக்குச் சென்றிருந்தார். 29 ஆம் திகதி வீட்டில் பிரசவம் செய்தார். இந்த சம்பவம் குறித்து ஹட்டன் போலீஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரித்து வருகிறது.
மாணவியும், சிசுவும் டிகோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




