நீர்வேலியில் நேற்று இராணுவத்தினரால் மீட்கப்பட்ட மிதிவெடி, இன்று கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நீர்வேலியில் காணியொன்றில் நேற்று நல்ல நிலையிலிருந்த கண்ணிவெடி. மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை கள் சீவும் தொழிலாளி மிதிவெடியை அவதானித்து, காணி உரிமையாளரிடன் கூறி உள்ளார். காணி உரிமையாளர் அதை அருகில் உள்ள கடைக்காரரிடம் கூறி உள்ளார். கடைக்காரன் இராணுவத்திடம் கூறி இராணுவம் நேற்று அதை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
தகவலறிந்த கோப்பாய் பொலிசார் விசாரணை செய்த போது, அதை இராணுவம் மீட்டுச் சென்ற தகவல் தெரிய வந்தது.
பொலிசாரின் தலையீட்டையடுத்து, இராணுவம் அந்த மிதிவெடியை மீட்ட இடத்திலேயே வைத்ததை தொடர்ந்து, கோப்பாய் பொலிசார் அதனை மீட்டு, விசாரணைகளை தொடர்ந்துள்ளனர். ச
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1