31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

164 நாட்களின் பின்னர் இலங்கையில் 150 இற்கும் குறைவான தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்று  139 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 164 நாட்களின் பின்னர் நாட்டில் முதல் முறையாக 150 க்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்றாளர்கள. பதிவாகியுள்ளனர்.

நேற்று 139 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர். பேலியகொட கொத்தணியில் 118 பேரும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து 7 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 14 நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மொத்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,442 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி 150 க்கும் குறைவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகினர். இரண்டாவது அலையின் தொடக்க சமயமான அப்போது, 121 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த 176 பேர் நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,090 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 2,749 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், வைரஸ் தொற்று சந்தேகத்தில் 472 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment