யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று (31) இரவு பிந்தி வெளியான முடிவுகளின் படி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 756 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 25 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நகரின் புதிய சந்தை தொகுதியில் 8 பேரும், சண்லிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் 320 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இவை அனைத்தும் புதிய சந்தையுடன் தொடர்புடையவர்கள். இதில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.
முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 551 பேரின் பி.சிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இவையும் புதிய சந்தையுடன் தொடர்புடையவர்களின் மாதிரிகள். இதில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.