யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (31) இரவு பிந்தி வெளியான முடிவுகளின் படி,  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 756 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 25 பேர்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நகரின் புதிய சந்தை தொகுதியில் 8 பேரும், சண்லிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 பேரும்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் 320 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இவை அனைத்தும் புதிய சந்தையுடன் தொடர்புடையவர்கள். இதில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.

முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 551 பேரின் பி.சிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இவையும் புதிய சந்தையுடன் தொடர்புடையவர்களின் மாதிரிகள். இதில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்