மட்டக்களப்பில் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது ஆலயத்தின் கிணறு நிரம்பி வழிந்ததால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள விக்னேஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் ஆலய தீர்த்தக் கிணறு பெருக்கெடுத்து வழிந்தது.
இந்து இறைவனின் திருவிளையாடல் என குறிப்பிட்டு, அந்த பகுதியிலிருந்த பக்கதர்கள் ஆலய கிணற்றை வணங்கினர்.
தகவலறிந்து பெருமளவானவர்கள் ஆலய கிணற்றை பார்க்க படையெடுத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1