பன்னிபபிட்டி பகுதியில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, விசாரணை இடம்பெற்று வருகிறது.
லொறி சாரதியில் தவறுஇருப்பினும்,அவரை தாக்கும் உரிமை பொலிஸ் உத்தியோகத்தருக்கு இல்லையென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த தாக்குதல் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்ததை தொடர்்து, பொலிஸ் உத்தியோக்தரை இடைநிறுத்தி, விசாரணைகளை மேற்கொள்ள பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டார்.
முன்னதாக மஹரகம பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியை அந்த லொறி விபத்திற்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தே பொலிஸ்காரர் தாக்கியுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மஹரகம பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1