பொலிஸ்காரர் வீட்டுக்கு… காயமடைந்தவர் வைத்தியசாலையில்!

Date:

பன்னிபபிட்டி பகுதியில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, விசாரணை இடம்பெற்று வருகிறது.

லொறி சாரதியில் தவறுஇருப்பினும்,அவரை தாக்கும் உரிமை பொலிஸ் உத்தியோகத்தருக்கு இல்லையென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த தாக்குதல் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்ததை தொடர்்து,  பொலிஸ் உத்தியோக்தரை இடைநிறுத்தி, விசாரணைகளை மேற்கொள்ள பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டார்.

முன்னதாக மஹரகம பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரியை அந்த லொறி விபத்திற்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தே பொலிஸ்காரர் தாக்கியுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மஹரகம பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்