நேற்று 215 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 215 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,303 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 151 பேர், மினுவாங்கொட – பேலியகொட கொருானா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 49 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது, 2,823 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, வைரஸிலிருந்து குணமடைந்த 291 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 88,914 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 393 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்