கொரோனா தொற்றால் உயிரிழந்த 21 நாள் குழந்தையின் தகனம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமை மனுவின் விசாரணையில் இருந்து நீதிபதி யசந்த கொட்டகொட தன்னை விலக்கிக் கொண்டார்.
தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மனுவின் விசாரணையில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
இந்த மனுவை 21 நாள் குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் பிரியந்த ஜெயவர்தன அடங்கிய நான்கு பேர் கொண்ட பெஞ்ச் பரிசீலித்தது. காமினி அமரசேகர,எல்.டி.பி. தெஹிதெனிய, யசந்த கொட்டகொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய குழாம் விசாரணை செய்தது.
கொரோனா தொற்றால் காரணமாக உயிரிழந்த 19 நபர்களின் எச்சங்கள் அந்த நேரத்தில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் உடனடியாக தகனம் செய்யப்பட வேண்டும் என தமக்கு அறிவுத்தியதாக குழந்தையின் பெற்றோர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜி.விஜேசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.