[embedyt] https://www.youtube.com/watch?v=VSbGM-lE5Co[/embedyt]
திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்றது.
சைவாலயங்கள் நிறைந்த திருகோணமலையில் பழமையான கிருஷ்ணன் கோவிலாக சிறப்புப்பெற்று விளங்கும் இவ் ஆலயத்தில், கடந்த சனிக்கிழமை (01) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (02) எண்ணைக்காப்பு சாந்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று விசேட அபிஷேக ஆராதனைகளுடன் பெருமானின் திருக்குடமுழுக்கு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.




