அமெரிக்காவின் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்ததாகவும், விரைவில் ஒரு இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
ஃபைசர் நிறுவனம் போக்குவரத்தின் போது சிறப்பு சேமிப்பக உபகரணங்களில் தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஃபைசர் தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி குளிர்பதன நிலைமையிலேயே சேமிக்க வேண்டும். எனினும், இந்த வசதி இலங்கை அரசிடம் இல்லை. இந்த விவகாரம் உற்பத்தியாளருடன் விவாதிக்கப்பட்டு, உற்பத்தியாளர் இப்போது ஒரு தீர்வை வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
மைனஸ் 70 டிகிரி குளிர்பதனத்தில் சேமிக்கப்பட்டபடியே, தடுப்பூசிகளை சேமிப்பு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வசதிகளை வழங்க நிறுவனம் தயாராக உள்ளது. நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளை ஏறக்குறைய ஒரு வாரம் சாதாரண குளிர்பதனத்தில் சேமிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஃபைசர்-பயோஎன்டெக்கிலிருந்து விரைவில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.