தனியார் வகுப்புக்கள்… திருமணம்… பார்ட்டிகள் இல்லை: யாழ் மாவட்டத்தில் இன்று முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள்!

Date:

யாழ் மாநகர பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு மாத்திரம் முடக்கப்பட்டுள்ளது. எனினும், அங்குள்ள வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கலாம் என்ற முடிவை யாழ் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு செயலணி நேற்று எடுத்தது.

நேற்றைய கூட்டத்தின்படி, இன்று (26) முதல் யாழ் மாவட்டத்தில் அமுலாகும் கட்டுப்பாடுகள் வருமாறு-

யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும்,  மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும்.

முடக்கப்பட்ட பகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்களும், பணியாளர்களும் வீடுகளில் குடும்பத்துடன் சுயதனிமைப்பட்டு, அந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னரே, இந்த பகுதி விடுவிக்கப்படும் போது வர்த்தக நிலையங்களை திறக்கலாம்.

பாடசாலைகள் யாவும் வழக்கமாக இயங்கும். யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 இற்கு மேற்பட்ட மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாணவர்கள் கல்வி பயின்ற வகுப்புக்களை மட்டும் மூட முடிவு செய்ய்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உயர்தரம், சாதாரண தரம், புலமைப்பரிசில் வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களிற்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பூப்புனித நீராட்டு விழா, திருமணவிழா, குடும்ப விழாக்களை மண்டபங்களில் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விழாக்களை வீடுகளில் 50இற்கு மேற்படாத குடும்ப அங்கத்தவர்களுடன் நடத்தலாம்.

மரணவீடுகளில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம். 24 மணித்தியாலங்களில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

புதுவருட தினத்தை முன்னிட்டு நடைபெறும் நடைபாதை வியாபாரம் யாழ் மாவட்டத்தில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற ஒன்றுகூடல்கள், களியாட்டங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அவசியமான கூட்டங்கள் மாத்திரமே சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் நடத்தலாம்.

 

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்