மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் (PHOTOS)

Date:

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று (25) பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30ற்கும் 35ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்