54 இந்திய மீனவர்கள் கைது!

Date:

கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன்
இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (24)  அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில்
ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு றோலர் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், இருபது மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று (25) கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளனர்.

அவர்களை ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சற்று முன்னர் இலங்கை கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு கடற்பரப்புக்களில் நேற்று இரவு  5 படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்