நயன்தாரா திருமணம் செய்து கொண்டார்?

Date:

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமநிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நயன்தாரா வெளியிட்ட மோதிர புகைப்பட்தை தொடர்ந்தே இந்த தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா பல்வேறு காதல் தோல்விகளுக்கு பிறகு கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.

இருவரும் செல்லுமிடமெல்லாம் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு பழைய காதலர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அதனை பார்த்த சிலர், இதேபோல் நயன்தாரா எத்தனை ஹீரோக்களுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா என கிண்டலடித்தனர்.

ஆனால் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. நான் நயன்தாராவின் காதலர், அவ்வளவுதான் என கெத்தாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.

திருமணத்தை பற்றி இருவரும் வாய் திறக்காமலிருந்து வந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்கி நயன் என்ற பெயருடன் கையில் மோதிரம் போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள் என்ற தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்