பேருந்தில் திருடியவர் சிக்கினார்!

Date:

திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரேயே பயணிகள் பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:

திருகோணமலையிலிருந்து நேற்று மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய சந்தேக நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் கண்டு கூக்குரலிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்