சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சையளித்தவர் கைது!

Date:

தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

சஹ்ரானின் சகோதரரான ரில்வான், 2018ஆம் ஆண்டு குண்டொன்றை வெடிக்க வைத்து பரீட்சித்த போது காயமடைந்திருந்தார். ரில்வானை கொழும்புக்கு அழைத்து வந்து அவருக்கான மருத்துவ சிகிச்சைகயை முன்னெடுத்தவரே நேற்றைய தினம் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட நபர்.

இதேவேளை, டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 44 வயதுடைய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மாவனெல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசெம்பர் 5ஆம் திகதி சந்தேகநபர், டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின்...

ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்...

பத்மேயின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்