தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Date:

திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்