காஞ்சனா 3 நடிகைக்கு கொரோனா

Date:

காஞ்சனா 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த படம் காஞ்சனா 3. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நிக்கி தம்போலி.

காஞ்சனா 3 படத்துக்குப் பிறகு புதிதாக வேறு எந்தவொரு தமிழ்ப் படத்திலும் நிக்கி தம்போலி நடிக்கவில்லை. இந்தியில் பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 3வது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நிக்கி தம்போலிக்கு பல்வேறு ரசிகர்கள் உருவானார்கள்.

தற்போது தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக்கி தம்போலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் சுய தனிமையில் இருக்கிறேன். மருத்துவரின் அறிவுரையின் பேரில் தேவைப்படும் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருந்துகளையும் நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், என்றும் முகக் கவசம் அணியுங்கள். அடிக்கடி உங்கள் கைகளில் கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்யுங்கள், சமூக இடைவெளியைப் பேணுங்கள். அனைவருக்கும் என் அன்பு”.

இவ்வாறு நிக்கி தம்போலி தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CMl7BEdnfB6/?utm_source=ig_web_copy_link

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்