நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Date:

திடீர் மூச்சுத் திணறலால், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில படங்களில் கவுரவக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கார்த்திக். மேலும், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும், அரசியலில் தனது நிலைப்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

நேற்றிரவு அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக, ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை அடையாற்றில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. கார்த்திக்கு கரோனா பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்