பசறை விபத்து: பேருந்தை தவற விட்டு, முச்சக்கர வண்டியில் விரட்டிச் சென்று பேருந்தில் ஏறிய தம்பதியும் உயிரிழந்தனர்!

Date:

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகியிருந்தனர். பசறை பகுதியே சோகமயமாகியுள்ளதுடன், வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

பேருந்து விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (31), அந்தோனி நோவா (32) ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்த தம்பதியினர் வழக்கமாக பேருந்தில் ஏறுமிடத்திற்கு வர தாமதமாகியதால், பேருந்தை தவறவிட்டுள்ளனர்.

ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்பதற்காக ஆட்டோவில் வந்த, பேருந்தை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.

அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்