சமூக ஊடகங்கள் மூலம் உப பொலிஸ் பரிசோதகராக நடித்து வந்த ஒருவர் நேற்று இரவு (15) பன்னிப்பிட்டி, பொல்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அவரை கைது செய்தது.
சந்தேகநபர் இன்று (16) நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் ரூ .200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பொலிஸ் சீருடையில் எடுத்த புகைப்படங்களை வட்ஸ்அப், எமோ, வைபர் மற்றும் முக புத்தகத்தில் பதிவிட்டு, தன்னை உப பொலிஸ் பரிசோதகராக குறிப்பிட்டு வந்துள்ளார்.
ரக்வாணை பகுதியை சேர்ந்த 35 வயதான நபர், கட்டிட கட்டுமானத் துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.
பொலிஸ் பரிசோதகராக குறிப்பிட்டு ஏதேனும் குற்றத்தில் தொடர்புபட்டுள்ளாரா என்று கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1